வாடகை வீட்டில் இருந்தாலும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் - கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா


வாடகை வீட்டில் இருந்தாலும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் - கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா
x

கர்நாடகாவில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 5 வாக்குகளை நிறைவேற்றுவதாக கூறியிருந்தது. இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவியேற்றனர்.

இதன்பின், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மாநிலத்தின் முதல் முதலமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார். அந்த கூட்டத்தில் 5 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதோடு, திட்டங்கள் அமலுக்கு வரும் தேதியையும் சித்தராமையா அறிவித்தார்.

இதில் 'க்ருஹா ஜோதி' என்ற திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் இந்த திட்டம் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள இலவச மின்சாரம், யாருக்கெல்லா வழங்கப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்த நிலையில், இது குறித்து முதல்-மந்திரி சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சித்தராமையா, 'கர்நாடகாவில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் உட்பட அனைத்து வீட்டு நுகர்வோருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்' என தெரிவித்தார்.


Next Story