ஜி.எஸ்.டி., அறிமுகம் வரி பயங்கரவாதத்தில் இருந்து நள்ளிரவில் சுதந்திரம் பிரதமர் பேச்சு


ஜி.எஸ்.டி., அறிமுகம் வரி பயங்கரவாதத்தில் இருந்து நள்ளிரவில் சுதந்திரம் பிரதமர் பேச்சு
x
தினத்தந்தி 1 July 2017 10:52 AM IST (Updated: 1 July 2017 10:51 AM IST)
t-max-icont-min-icon

ஊழல்,கறுப்புபணத்தை ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை ஒழிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.


புதுடெல்லி

பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜி.எஸ்.டி அறிமுக விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டின் எதிர்கால பாதையை நள்ளிரவில் முடிவு செய்கிறோம். இது ஒரு கட்சிக்கான வெற்றியல்ல, அரசிற்கான வெற்றியல்ல. நாட்டிற்கான வெற்றி. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு சிறந்த உதாரணம்.

நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லும் நோக்கில் ஜி.எஸ்.டி இருக்கும். நாட்டின் எதிர்காலப் பாதையை நள்ளிரவில் முடிவு செய்ய இருக்கின்றோம். ஜி.எஸ்.டி ஒரு அரசின் சாதனை அல்ல, கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. சுதந்திர நள்ளிரவைப் போன்று இந்த நள்ளிரவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வரி பயங்கரவாதத்தில் இருந்து,  நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்துள்ளது.  நீண்ட ஆலோசனைக்கு பின்னரே ஜி.எஸ்.டி.க்கு இறுதி வடிவம் தரப்பட்டது.

ஜி.எஸ்.டி.யால் வியாபாரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்கும், இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கும் இது உதவிகரமாக இருக்கும். இந்திய ரயில்வேயை போல் மத்திய மாநில அரசுகள் இணைந்து கையாளும். நாட்டின் வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி உதவியாக இருக்கும்.

கீதையில் 18 அத்தியாயங்கள் இருப்பதைப் போன்று 18 கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு ஜி.எஸ்.டி., அறிமுகமாகியுள்ளது. முதலில் மாநிலங்களுக்க நிறைய சந்தேகம் இருந்தது தொடர்ந்து ஆலோசிக்கப்பட்ட பிறகு அது களையப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story