தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து நீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும்-நிபுணர்கள் கருத்து


தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து  நீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும்-நிபுணர்கள் கருத்து
x
தினத்தந்தி 1 July 2017 3:13 PM IST (Updated: 1 July 2017 3:13 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் தண்ணீர் உருவாக்குவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு மூலம் கிடக்கும் நீரை விவசாயம் மற்றும் தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தலாம்.

சிங்கப்பூர்,

இந்தியாவில் தற்சமயம் நீர் மேலாண்மை பல அடுக்குகளாக உள்ளது. அதன் அதிகாரம் மத்திய அரசின் நீர்  வளங்கள் அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல்  மற்றும் பருவ நிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் உள்ளது. மற்றும் மாநில அரசு மற்றும்  நகராட்சிகள் கீழ் உள்ளது.  

இது பற்றி டெல்லி பல்கலைக்கழத்தின் பேராசிரியர் சத்தியஜித் சிங் கூறியதாவது,” நீர் மேலாண்மையின் அதிகாரம்  நகராட்சி போன்று ஏதாவது ஒரு தொகுதியின் கீழ் வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில்  தண்ணீர் உருவாக்குவதற்கான  வாய்ப்பு அதிக அளவில்  உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு மூலம் கிடக்கும் நீரை விவசாயம் மற்றும் தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தலாம் என சிங்கப்பூரில் நடந்த பொதுக்கொள்கை மீதான  மூன்றாவது தேசிய  மாநாட்டில் (ICPP) கூறினார்.

மேலும் அவர் அரசு தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து தண்ணீர் மேலாண்மையை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதன் மூலம் நீர் தட்டுப்பாட்டை குறைக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் இந்த மாநாட்டில் பல்வேறு பொது கொள்கை பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1200 க்கும் மேற்பட்ட தேசிய அமைப்புகளின்  தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story