குடியரசுத் தலைவர் தேர்தலை ‘தலித்மயமாக்குவதாக’ மீரா குமார் குற்றச்சட்டு
குடியரசுத் தலைவர் தேர்தல் அசிங்கமாக இரு தலித் குடிமகக்களுக்கு இடையே நடப்பதாக பேசப்படுவது குறித்து வருத்தம் தெரிவித்தார் மீரா குமார்.
பெங்களூரு
காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகளின் பேரவை உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவு கேட்டு பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.
“நான் உண்மையில் ஏன் இப்படி நடக்கிறது என்பது குறித்து வருந்துகிறேன். ஆனால் பலரது முகமூடிகள் கழற்றி விட்டது. இந்த 2017 ஆம் ஆண்டில், நவீன காலகட்டத்தில் இப்படியெல்லாம் சிலர் சிந்திக்கிறார்களே; படித்தவர்கள் கூட சாதி பற்றிய சிந்தனைகளை கைவிடவில்லை, அதிக வலியுடன் நான் இதுபற்றி வருந்துகிறேன்”.
ஏன் இது போன்ற கேள்விகள் இதர முன்னேறிய சாதிகளை சேர்ந்தவர்கள் போட்டியிடும்போது எழுவதில்லை என்று கேட்டார் மீரா குமார்.”முன்பெல்லாம் குடியரசுத்தலைவர் வேட்பாளர்களின் குணம், அனுபவம், திறமை இது பற்றித்தான் விவாதிப்பார்கள். நானும் ராம்நத் கோவிந்த்தும் போட்டியிடும்போது இதர விஷயங்கள் இல்லாமல் சாதி பற்றிய விவாதமே முன் நிற்கிறது. எல்லோரும் நாட்டின் முன்னேற்றம் குறித்து சிந்திக்க விரும்புகிறார்கள். சாதி அடிப்படையில் சிந்திக்காமல் உயரிய சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.
சாதிகளுக்கு மத்தியில் வேற்றுமை இன்றும் பார்க்கப்படுகிறது; தலித்துகள் மட்டமாக பார்க்கப்படுகிறார்கள். இந்நாட்டின் மிக உயரிய தேர்தல் தலித்மயமாக்கப்படுகிறது. நாடு இத்தகைய சிந்தனைகளை கைவிட வேண்டும். ஒடுக்கப்படும் சாதிகளுக்கு ஆதரவாக போராடுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அது எப்படி குடியரசுத்தலைவர் தேர்தலில் சாதிக் காரணியாக இடம் பெற முடியும் என்று கேள்வி எழுப்பினார் மீரா குமார்.
Related Tags :
Next Story