போலி கால் சென்டர் மூலம் அமெரிக்க குடிமக்களை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது


போலி கால் சென்டர் மூலம் அமெரிக்க குடிமக்களை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 1 July 2017 4:52 PM IST (Updated: 1 July 2017 4:52 PM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தாவின் பெக்பாகன் ரோ பகுதியில் ஷாராஃபட் அலி என்பவர் போலி கால் சென்டர் மூலம் பல அமெரிக்க குடிமக்களை ஏமாற்றி பணம் பறித்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.

கொல்கத்தா,

கொல்கத்தாவின் பெக்பாகன் ரோ பகுதியில் ஷாராபட் அலி என்பவர் போலி கால் சென்டர் மூலம் பல அமெரிக்க குடிமக்களை ஏமாற்றி பணம் பறித்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.


இவர் தன்னை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஊழியர் என்று கூறி  அமெரிக்கர்களை தொடர்பு கொண்டுள்ளார். அவர்களின் கணினியில்  மர்ம நபர்கள் ஊடுருவல் இருப்பதாகவும் மேலும் கணினியில் உள்ள தகவல்கள் திருடப்படுவதாகவும் கூறி உள்ளார். அதனை சரி செய்து தருவதாக கூறி பணம் பெற்றுள்ளார். இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் 'டீம் வியூயர் 'எனும் தொழில்நுட்பம் மூலம் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து சிபியு ,ஐ போன் , லப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஷாராபட் அலியை ஜீலை 10 வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடைபெறும் என போலீஸார் தெரிவித்தனர்.  


Next Story