சிலர் கொள்ளையடித்து வருவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது -பிரதமர் மோடி பேச்சு


சிலர் கொள்ளையடித்து வருவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது -பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 1 July 2017 8:21 PM IST (Updated: 1 July 2017 8:21 PM IST)
t-max-icont-min-icon

சிலர் கொள்ளையடித்து வருவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் ஐ.சி.ஏ.ஐ.கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

இந்தியா பொருளாதாரத்தில் ஜிஎஸ்டி புதிய பாதை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.  சிலர் கொள்ளையடித்து வருவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.  37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பட்டயக்கணக்காளரின் கையெழுத்து பிரதமரின் கையொப்பத்தை விட வலிமையானது. பட்டயக்கணக்காளரின் கையெழுத்தை நம்பியே கணக்கு வழக்குகளை அரசு ஏற்றுக்கொள்கிறது. அரசின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் பட்டயக்கணக்காளர்கள் நடக்க கூடாது.

டாக்டர்கள் வியபாரத்திற்காக மக்களை தவறாக பயன்படுத்தவில்லை. அதுபோன்று பட்டயகணக்காளர்கள் சமுதாய பொருளாதாரத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டும்.

நேர்மையாக வரி செலுத்துபவர்கள் ஜிஎஸ்டி ஊக்குவிக்கும்.தேவையான அனைத்தையும் நம்மிடம் இருந்தே பெறும் வகையில் தன்னிறைவு அடைய வேண்டும். 2022-ல் 75-ம் சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நாடு தன்னிறைவு பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story