வெளிநாட்டு பயணம் முடித்து ராகுல் காந்தி நாடு திரும்பினார்
வெளிநாட்டு பயணம் முடித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நாடு திரும்பினார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் துணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தனது தாய்வழி பாட்டியை பார்ப்பதற்காக இத்தாலி சென்றிருந்தார். இதற்காக கடந்த மாதம் 13–ந் தேதி புறப்பட்டு சென்ற அவர், இத்தாலியில் தனது பாட்டி மற்றும் அவரது குடும்பத்தினருடன் விடுமுறையை கழித்தார்.
இந்த பயணத்தின் இடையிலேயே தனது பிறந்த நாளையும் கடந்த 19–ந் தேதி கொண்டாடினார். இந்த விடுமுறை மற்றும் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அவர் நாடு திரும்பினார். டெல்லி வந்துள்ள அவர் தொடர்ந்து கட்சிப்பணிகளில் ஈடுபடுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜி.எஸ்.டி குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் டிவிட்டரில்,
ஜி.எஸ்.டி.யை அவசர கதியில் அமல்படுத்தப்படுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது. பா.ஜ.க. அரசு சுய விளம்பரத்துக்காகவே ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துகிறது. திறமையில்லாத அரசு மூலம் இந்த புதிய வரிவிதிப்பு நடைமுறை அமல் செய்யப்படுவது கவலையளிக்கிறது.
கோடிக்கணக்கான சாதாரண மக்கள், சிறு வணிகர்கள், வர்த்தகர்களுக்கு பாதிக்காத வகையில் ஜிஎஸ்டி அமல் படுத்த வேண்டும்'' என்று ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story