200 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது ரிசர்வ் வங்கி தகவல்


200 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது ரிசர்வ் வங்கி தகவல்
x
தினத்தந்தி 4 July 2017 3:03 PM IST (Updated: 4 July 2017 3:03 PM IST)
t-max-icont-min-icon

200 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

200 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக அதற்கான நகலை ரிசர்வ் வங்கி செய்தியார்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்த மத்திய அரசு, புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. வங்கிகள், அஞ்சல் அலுவலகங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளாலாம் என்று டிசம்பர் 30, 2016 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

புதிய ரூபாய் நோட்டு புழகத்தால் பொதுமக்கள், வணிகர்கள் கடும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கிக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். 

இந்த நிலையில் புதியதாக 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.

பணப்புழகத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு  200 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. விரைவில் 200 ரூபாய் நோட்டு பொதுமக்கள் புழக்கத்திற்கு விடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Next Story