ஜிஎஸ்டி இணையதளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்: வருவாய் துறை செயலாளர்


ஜிஎஸ்டி இணையதளத்தில் 2  லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்: வருவாய் துறை செயலாளர்
x
தினத்தந்தி 4 July 2017 8:00 PM IST (Updated: 4 July 2017 8:00 PM IST)
t-max-icont-min-icon

ஜிஎஸ்டி இணையதளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக வருவாய் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையான சரக்கு சேவை வரி கடந்த 1 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு, ஜி.எஸ்.டி இணையதளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர் என்று வருமான வரித்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹஸ்முக் ஆதியா கூறியாதாவது:- ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஜிஎஸ்டி இணையதளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். 39,000 பேர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். மக்கள் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய  பொருட்களுக்கு ஜிஸ்டி யில் குறிப்பிடப்படவில்லை. சிறு குறு வணிகள் ஏற்கனவே பதிவு செய்துள்ள வரியை செலுத்தினால் போதும். 

ரூ.75 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிக வருவாய் கொண்ட தொழில்கள் பில் அவசியம் கொடுக்கப்பட வேண்டும்.  ஜிஎஸ்டிக்கு முன், ஜிஎஸ்டிக்கு பின் உள்ள விலையை தெளிவாக பொருட்களில் பதிவிட வேண்டும்.  பொருட்கள் மீதான எம்.ஆர்.பி. விலையை செப்டம்பர் 30-க்குள் மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு பொருட்களின் விலையை 3 மாதங்களுக்கு  தெளிவாக ஸ்டிக்கர்களை பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

Next Story