அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கற்கள் கொண்டுவரப்பட்டது
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கற்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அயோத்தி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி–பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் என்று மனுதாரர்களில் ஒருவரும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று யோசனை கூறியது. இதனை பாரதீய ஜனதா வரவேற்று உள்ளது. ஆனால் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு யோசனையை பாபர் மசூதி நடவடிக்கை குழு நிராகரித்துவிட்டது.
அயோத்தியில், ராமர் பிறந்ததாக கூறப்படும் இடத்தில் சிறிய அளவில் ராமர் கோவில் உள்ளது. அங்கு பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டும் திட்டத்தை விசுவ இந்து பரிஷத் அறிவித்துள்ளது. கோவில் கட்டத் தேவையான கற்களை நாடு முழுவதும் சேகரிக்கப் போவதாக கடந்த 2015ம் ஆண்டு அறிவித்தது. அவ்வாண்டு இறுதியில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திட்டத்துக்காக விசுவ இந்து பரிஷத் சேகரித்த கற்கள், 2 லாரிகளில் அயோத்திக்கு வந்து சேர்ந்தன. இப்போது மூன்று டிராக்டர்களில் கோவில் கட்டுவதற்கு கற்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது. விசுவ இந்து பரிஷத் கண்காணிப்பின் கீழ் கற்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பிரதிநிதி பிரகாஷ்குமார் குப்தா பேசுகையில், சிகப்பு கற்கள் அனைத்தும் ராமர் கோவில் கட்டுவதற்கு கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்னதாகவும் கற்கள் கொண்டுவரப்பட்டது, இப்போதும் வந்து உள்ளது. ராமர் கோவில் கட்டுவதற்கு கற்களை கொண்டுவர அகிலேஷ் யாதவ் அரசு தடை விதித்து இருந்தது. கற்கள் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் அமைத்து உள்ள குடோனில் வைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story