புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி பதவி ஏற்பு
இந்திய புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி இன்று முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்.
புதுடெல்லி,
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் சைதி வரும் 6-ம் தேதி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து மத்திய சட்ட அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. இதில் ஆலோசனையில் குஜராத் முன்னாள் தலைமை செயலாளர் அச்சல் குமார் ஜோதியை புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்க பரிந்துரை செய்தது. இதற்கு குடியரசு தலைவரும் ஓப்புதல் அளித்தார்.
இந்த நிலையில் புதிய தேர்தல் ஆணையராக குஜராத் முன்னாள் தலைமை செயலாளர் அச்சல் குமார் ஜோதி முறைப்படி இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
அச்சல் குமார் ஜோதி குஜராத் முன்னாள் தலைமை செயலாளரராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக 1975-ல் பணிக்கு வந்தவர் . தலைமை தேர்தல் ஆணையர் பொறுப்பில் 2018 ஜனவரி 17 ஆம் தேதி வரை அச்சல் குமார்ஜோதி இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சல் குமார் ஜோதி 21-ஆவது தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story