உத்தரகாண்டில் ஆற்று பாலத்தை கடக்க முயன்ற கார் அடித்து செல்லப்பட்ட பரிதாபம் - வீடியோ
உத்தரகாண்டில் ஆற்று பாலத்தை கடக்க முயன்ற கார் அடித்து செல்லப்பட்டது.
ஹரித்துவார்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் சாம்பவத்தில் ஆற்று பாலத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. சாம்பவத்தில் பாலத்தில் ஒரு கார் ஒன்று ஆற்று பாலத்தை கடக்க முயன்ற போது நடு வழியில் திடீரென வெள்ளம் அதிகமாக வந்துள்ளது. இதனால் கார் உரிமையாளர் செய்து அறியாமல் காருக்கு உள்ளே மயங்கி விழுந்தார். பாய்ந்து வந்த வெள்ளம் அந்த காரை அடித்து இழுத்து சென்றது. அந்த கார் உரிமையாளர் வெள்ளம் இந்த அளவுக்கு வரும் என்று எதிர்பார்க்க வில்லை. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story