ஜனாதிபதி பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது: பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்
ஜனாதிபதி பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
வரும் 17-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில், அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு இன்று சென்றார்.
இடாநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில எம்எல்ஏக்கள் மத்தியில் பேசிய ராம்நாத்கோவிந்த் கூறுகையில், “ இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும், அதன் பலன் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. அருணாச்சல பிரதேசம் சிறிய மாநிலமாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களைப் போல முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.
முந்தைய ஆட்சியின்போது வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டன. ஆனால் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நிலை மாறி உள்ளது. ஜனாதிபதி தேர்தல் என்பவர் எந்தக் கட்சியையும் சாராதவர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story