நியமன எம்.எல்.ஏ. பிரச்சினையை அரசியல் ஆக்குகின்றனர் கிரண்பெடி பேட்டி


நியமன எம்.எல்.ஏ. பிரச்சினையை அரசியல் ஆக்குகின்றனர் கிரண்பெடி பேட்டி
x
தினத்தந்தி 8 July 2017 12:50 AM IST (Updated: 8 July 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

நியமன எம்.எல்.ஏ. பிரச்சினையை அரசியல் ஆக்குகின்றனர் என்று கிரண்பெடி கூறியுள்ளார்.

ஆலந்தூர், 

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பெடி, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் மக்களின் நன்மைக்காக சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் செயல்படுகிறேன். மத்திய அரசின் உத்தரவின் பேரில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் நியமனம் நடைபெற்றது. நியமன சட்டமன்ற உறுப்பினர் பிரச்சினையை அரசியல் ஆக்க முயற்சி செய்கின்றனர். புதுச்சேரி தலைமைச் செயலாளர் அரசுக்கும், கவர்னருக்கும் பாலமாக இருக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் சுகாதாரம், உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர தேவை இல்லாத நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story