பர்ஹான் வானி முதலாம் ஆண்டு நினைவுதினம்: ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு


பர்ஹான் வானி முதலாம் ஆண்டு நினைவுதினம்: ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு
x
தினத்தந்தி 9 July 2017 3:30 AM IST (Updated: 9 July 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

பர்ஹான் வானியின் முதலாம் ஆண்டு தினத்தையொட்டி ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்று ஸ்ரீநகர் மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

ஸ்ரீநகர், 

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்ஹான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் எதிரொலியாக ஸ்ரீநகரில் பல்வேறு மோதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்துவருகின்றன. இதில் பாதுகாப்பு படையினர் எடுத்த நடவடிக்கையில் இதுவரை பொதுமக்கள் சுமார் 100 பேர் பலியாகி இருக்கிறார்கள். பர்ஹான் வானியின் முதலாம் ஆண்டு தினத்தையொட்டி ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்று ஸ்ரீநகர் மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

இதுகுறித்து வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தபடி இருந்தனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.

இந்த பகுதிகளில் மக்கள் காய்கறி, பால், ரொட்டி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை. அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் மற்றும் ஆம்புலன்சுகள் மட்டுமே சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அரசு அலுவலர்களின் சில வாகனங்கள் மட்டுமே சாலைகளில் சென்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

Next Story