உத்தரபிரதேசத்தில் வாலிபர் மீது மர்ம நபர்கள் சரமாறி தாக்குதல்


உத்தரபிரதேசத்தில் வாலிபர் மீது மர்ம நபர்கள் சரமாறி தாக்குதல்
x
தினத்தந்தி 9 July 2017 4:00 PM IST (Updated: 9 July 2017 3:59 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் வாலிபரைமர்ம கும்பல் சரமாறியாக அடித்து உதைக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம்  ஹபூரின் பில்குவா பகுதியில் பரபரப்பாக காணப்படும் சாலையில் 45 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது அப்போது அந்த வழியாக வந்த  4 பேர் அந்த நபரை இரும்பு கம்பி மற்றும் உருட்டு கட்டையால் சரமாறியாக தாக்குகின்றனர்.இந்த தாக்குதலில் நிலைகுலைந்த வாலிபர் கிழே விழுந்தார்.   இந்த சம்பவம் அங்குள்ள சிசிடி கேமராவில் பதிவாகி உள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில்,

நான்கு பேர் என்னை இரும்பு கம்பியால் தாக்கினார்கள். இது குறித்து புகார் தெரிவித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  நான்கு நாட்கள் ஆன நிலையிலும் குற்றவாளிகளை போலீசார் பிடிக்க வில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Next Story