உள்நாட்டு விமானங்களில் எகானமி கிளாஸில் இனி அசைவ உணவுகள் கிடையாது -ஏர்இந்தியா


உள்நாட்டு விமானங்களில் எகானமி கிளாஸில் இனி அசைவ உணவுகள் கிடையாது -ஏர்இந்தியா
x
தினத்தந்தி 10 July 2017 3:10 PM IST (Updated: 10 July 2017 3:10 PM IST)
t-max-icont-min-icon

உள்நாட்டு விமானங்களில் எகானமி கிளாஸில் அசைவ உணவுகளை ஏர் இந்தியா நிறுத்தியது.

புதுடெல்லி,

செலவுகளை குறைக்கும் விதமாக உள்நாட்டு விமானங்களில் எகானமி கிளாஸில் பயணிகளுக்கு அசைவ உணவுகள் வழங்குவதை நிறுத்த ஏர்இந்தியா முடிவு செய்து உள்ளது.

வீணாதல் மற்றும் செலவினை குறைக்க உள்நாட்டு விமானங்களில் எகானமி கிளாஸில் பயணிகளுக்கு அசைவ உணவுகளை நிறுத்த ஏர் இந்தியா ஒரு  விழிப்புடைய முடிவை எடுத்து உள்ளது, இதன்மூலம் கேட்ரிங் சர்வீஸில் விருந்தோம்பலை மேம்படுத்த முடியும் என அரசு நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இந்த முடிவானது ஏற்கனவே கடந்த மாதம் அமலுக்கு வந்துவிட்டது என ஏர்லைன்ஸ் தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக பிடிஐ செய்தி வெளியிட்டு உள்ளது.

Next Story