அந்நிய நன்கொடைகளை பெறுவதற்கான உரிமத்தை 6000 நிறுவனங்கள் இழக்கலாம்?


அந்நிய நன்கொடைகளை பெறுவதற்கான உரிமத்தை 6000 நிறுவனங்கள் இழக்கலாம்?
x
தினத்தந்தி 10 July 2017 4:04 PM IST (Updated: 10 July 2017 4:04 PM IST)
t-max-icont-min-icon

கிட்டத்தட்ட 6,000 தன்னார்வ நிறுவனங்கள் வருடாந்திர வரவு-செலவு கணக்கை கடந்த ஐந்தாண்டுகளுக்கு தொடர்ச்சியாக வழங்காததால் தங்கள் உரிமத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

புதுடெல்லி

கிட்டத்தட்ட 6,000 தன்னார்வ நிறுவனங்கள் வருடாந்திர வரவு-செலவு கணக்கை கடந்த ஐந்தாண்டுகளுக்கு தொடர்ச்சியாக வழங்காததால் தங்கள் உரிமத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இவர்களுக்கு ஜூலை 8 ஆம் தேதி விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 23 ஆம் தேதிக்குள் அவர்கள் பதிலளிக்க வேண்டும்.  கடந்த மே மாதம் 18,523 தன்னார்வ நிறுவனங்கள் தங்களது கணக்குகளை ஜூன் 14 ஆம் தேதிக்குள் வழங்க ஒருமுறை வாய்ப்பு பெற்றனர், 
அந்நிய நன்கொடைகளைப் பெறும் தன்னார்வ நிறுவனங்கள் எஃப் சி ஆர் ஏ சட்டப்படி தங்களது ஐந்தாண்டு கணக்குகளை அதாவது 2010-11 லிருந்து 2014-15 வரைக்குமானவற்றை  அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். 

ஜூன் 14 ஆம் தேதிக்குள் கணக்கு சமர்பித்தால் எந்தவிதமான அபராதமும் இன்றி தாக்கல் செய்யலாம். அவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு மே மாத துவக்கத்திலிருந்து அனுப்பப்பட்டு வந்தது.

இருப்பினும் 5,922 நிறுவனங்கள் தங்களது கணக்குகளை மூன்று அல்லது மூன்றாண்டுகளுக்கு மேல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. எனவே ஜூலை 8 ஆம் தேதி ஏன் இவற்றின் உரிமத்தை ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டிஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 23 க்குள் பொருத்தமான பதில் கொடுக்காவிட்டால் உள்துறை அமைச்சகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20,000 தன்னார்வ நிறுவனங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் பதிவு செய்துள்ளன. 

உரிமம் புதுப்பிப்பு

இதே போல 2016 நவம்பரில் 11,000 தன்னார்வ நிறுவனங்களுக்கு நோட்டிஸ் அளிக்கப்பட்டது. இதில் பிப்ரவரி 2017 வரை 3,500 தன்னார்வ நிறுவனங்கள் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பம் கொடுத்தன. மீதமுள்ள 7,000 தன்னார்வ நிறுவனங்கள் தங்களது உரிமத்தை புதுப்பிக்க தவறியதால் தங்கள் பதிவை இழக்கவுள்ளன.


Next Story