அமர்நாத் தாக்குதல்: இது ஒரு கொடூரமான தாக்குதல் அசாதுதீன் ஓவைசி கண்டனம்
அமர்நாத் தாக்குதல்: இது ஒரு கொடூரமான தாக்குதல் இதில் அரசியல் செய்யவேண்டாம் என அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அனந்தநாக்
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் இமயமலையில் 3,388 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. இந்த குகைக்கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டு தோறும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் அங்கு யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 29–ந்தேதி தொடங்கியது. கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வழக்கம் போல் இந்த ஆண்டும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு 8.20 மணி அளவில் அனந்தநாக் மாவட்டத்தில் பதான்கு என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் போலீசார் வந்து கொண்டிருந்த வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு போலீசாரும் திருப்பி சுட்டனர். இதனால் பயங்கரவாதிகள் பின்வாங்கி ஓடினார்கள். அப்போது அந்த பாதையில், அமர்நாத் பக்தர்களின் பஸ் வந்தது. அவர்கள் அமர்நாத் சென்று பனி லிங்கத்தை தரிசித்து விட்டு பஸ்சில் திரும்பிக்கொண்டு இருந்தனர். அந்த பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் பஸ்சுக்குள் இருந்தவர்கள் அலறினார்கள். உடனே போலீசார் விரைந்து வந்து பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். இதனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 6 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் குண்டு பாய்ந்து பலி ஆனார்கள். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர். பலியான பக்தர்கள் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதல் பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு ராணுவ வீரர்களும், போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய பயங்கரவாதிகளை அவர்கள் தேடி வருகிறார்கள். பாதுகாப்பு கருதி இரவு 7 மணிக்கு மேல் அந்த பாதையில் அமர்நாத் பக்தர்களின் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் டிரைவர் பஸ்சை ஓட்டி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, காஷ்மீர் மாநில கவர்னர் என்.என்.வோரா, முதல்–மந்திரி மெகபூபா முப்தி,உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்த தாக்குதலின் முக்கிய மூளையாக லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதி இஸ்மாயில் செயல்பட்டு உள்ளான் என காஷ்மீர் ஐஜி முனிர்கான் தெரிவித்து உள்ளார்.
அமர்நாத் பக்தர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து ஆல் இந்தியா மஜ்லிஸ் தலைவர் அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
இது ஒரு கொடூரமான தாக்குதல் ஆகும்.லஷ்கர் மற்றும் ஐஎஸ்ஐ வெற்றி பெற நாங்கள் அனுமதிக்க முடியாது.நாடு ஒற்றுமையாக உள்ளது.இந்த தாக்குதல் குறித்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். சில கேள்விகளுக்கு அரசு இன்று அல்லது நாளை பதிலளிக்க வேண்டும்.

Related Tags :
Next Story