அமர்நாத் தீவிரவாத தாக்குதலில் பின்னணியாக செயல்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்


அமர்நாத் தீவிரவாத தாக்குதலில் பின்னணியாக செயல்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்
x
தினத்தந்தி 11 July 2017 6:25 PM IST (Updated: 11 July 2017 6:25 PM IST)
t-max-icont-min-icon

அமர்நாத் தீவிரவாத தாக்குதலில் பின்னணியாக செயல்பட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று கூறியுள்ளார்.

புதுடெல்லி,

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரைக்காக சென்ற பக்தர்களின் பேருந்து மீது நேற்று தீவிரவாத தாக்குதல் நடந்தது.  இதில் 6 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.  19 பேர் காயமடைந்தனர்.

இதனை அடுத்து யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்கு பகுதியாக எப்பொழுதும் இருந்து வரும் தேசிய தலைநகர் புதுடெல்லியில், குறிப்பிடும்படியாக, வடக்கு மற்றும் வடகிழக்கு டெல்லி பகுதிகள் என கன்வார்கள் (சிவ பக்தர்கள்) அதிகம் யாத்திரை மேற்கொள்ளும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அமர்நாத் பக்தர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தீவிரவாத செயல்கள் உறுதியுடனும் மற்றும் கூட்டு முயற்சியுடனும் எதிர்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை அமர்நாத் தாக்குதலில் பின்னணியாக செயல்பட்டவர்களை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.


Next Story