தீவிரவாதத்தினை முடிவுக்கு கொண்டு வருவதில் மோடியின் அரசு தோல்வி அடைந்துள்ளது: பிரவீண் தொகாடியா


தீவிரவாதத்தினை முடிவுக்கு கொண்டு வருவதில் மோடியின் அரசு தோல்வி அடைந்துள்ளது:  பிரவீண் தொகாடியா
x
தினத்தந்தி 11 July 2017 8:22 PM IST (Updated: 11 July 2017 8:22 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் தீவிரவாதத்தினை முடிவுக்கு கொண்டு வருவதில் மோடியின் அரசு தோல்வி அடைந்துள்ளது என விஷ்வ இந்து பரிஷத் கூறியுள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரைக்காக சென்ற பக்தர்களின் பேருந்து மீது நேற்று தீவிரவாத தாக்குதல் நடந்தது.
 
இதில் 6 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.  19 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் பிரவீண் தொகாடியா புதுடெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, மெஹ்பூபா தலைமையிலான ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசை கலைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முப்தியின் அரசு தீவிரவாதத்திற்கு ஆதரவானது என கூறியுள்ள அவர், காஷ்மீரை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்.  அவர்கள் தீவிரவாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை எதிர் கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணியுடன் முப்தி அரசு செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து பேசிய தொகாடியா, பிரதமர் நரேந்திர மோடி ஒரு முழு நேர பாதுகாப்பு மந்திரியை நியமிக்க வேண்டும் என கூறினார்.  125 கோடி இந்தியர்களில் திறமையான நபர அந்த பதவிக்கு வர வேண்டும் என கடுமையுடனும் அவர் கூறினார்.

தீவிரவாத  தாக்குதலானது, இந்துக்கள் பாதுகாப்புடன் இல்லை என்பதனை நிரூபித்துள்ளது.  அவர்கள் அமர்நாத்திற்கு பாதுகாப்புடன் யாத்திரை மேற்கொள்ள முடியவில்லை.  தனது 3 வருட ஆட்சியில் மோடி அரசால் தீவிரவாதத்தினை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை என்பது இந்த தாக்குதலில் வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story