ஆதார் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் மாநில அரசுகளுக்கு மோடி அறிவுரை


ஆதார் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் மாநில அரசுகளுக்கு மோடி அறிவுரை
x
தினத்தந்தி 11 July 2017 11:07 PM IST (Updated: 11 July 2017 11:07 PM IST)
t-max-icont-min-icon

நலத்திட்ட நிதி வீணாவதை தடுக்க ஆதார் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மோடி அறிவுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘நிதி ஆயோக்’ ஏற்பாடு செய்த இக்கூட்டத்தில், மோடி பேசியதாவது:–

ஒட்டுமொத்த உலகமும் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளது. இந்தியாவுடன் கூட்டு சேர விரும்புகிறது. இது நமக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. ஆகவே, மாநிலங்களில், வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி, முதலீட்டை பெருக்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆட்சிமுறையை மேம்படுத்தவும், நலத்திட்ட நிதி வீணாவதை தடுக்கவும் ஆதார் எண் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

ஆதார் பயன்பாடு, பரவலாக நல்ல பலன்களை அளித்துள்ளது. இளநிலை அதிகாரிகள், களப்பணிக்கு அதிக நேரத்தை செலவிட்டால்தான், பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு மோடி பேசினார்.

Next Story