மோடியின் கொள்கைதான் பயங்கரவாதத்திற்கு இடமளித்து உள்ளது ராகுல் காந்தி சொல்கிறார்
மோடியின் கொள்கைதான் காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு இடமளித்து உள்ளது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறிஉள்ளார்.
புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க பஸ்சில் சென்ற பக்தர்கள் மீது நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் இறந்தனர். உளவுத்துறை தகவல்கள் கிடைக்கப்பெற்றும் இதுபோன்ற தாக்குதலை தடுத்து நிறுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டரில் வரிசையாக தகவல்களை டுவிட் செய்து உள்ளார்.
மோடியின் கொள்கைதான் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு இடமளித்து உள்ளது. இந்தியாவிற்கு மிகப்பெரிய வியூக தோல்வியாகும். பிடிபி உடனான கூட்டணியிலிருந்து மோடிக்கான குறுகிய கால அரசியல் வளர்ச்சிக்கு இந்தியாவிற்கு பொருமளவு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவின் வியூக தோல்வி மற்றும் அப்பாவி இந்திய மக்கள் சிந்தும் இரத்தம் பிரதமர் மோடியின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு சமம் என விமர்சனம் செய்து உள்ளார் ராகுல் காந்தி. அமர்நாத் யாத்திரை தாக்குதல் நடந்த போது டுவிட்டரில் ராகுல் வெளியிட்ட தகவலில்
இது மிகப்பெரிய மற்றும் ஏற்றுக் கொள்ளமுடியாத பாதுகாப்பு குறைப்பாடு, இதற்கு பிரதமர் பொறுப்பு ஏற்க வேண்டும், இதனை மீண்டும் அனுமதிக்க கூடாது என குறிப்பிட்டு இருந்தார்.
Related Tags :
Next Story