அமர்நாத் தாக்குதல் கண்டன போராட்டத்தில் சுவாமி ஓமை தாக்கிய பெண்கள்


அமர்நாத் தாக்குதல் கண்டன போராட்டத்தில் சுவாமி ஓமை தாக்கிய பெண்கள்
x
தினத்தந்தி 12 July 2017 5:51 PM IST (Updated: 12 July 2017 5:51 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நடந்த அமர்நாத் தாக்குதல் கண்டன போராட்டத்தில் சுவாமி ஓம் பெண்களால் தாக்கபட்டார்.

புதுடெல்லி

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க பஸ்சில் சென்ற பக்தர்கள் மீது நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் இறந்தனர்.  21 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று  அமர்நாத் தாக்குதலை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தும்  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில்  பாலிவுட் பிக்பாஸ் சீசன் 10 புகழ் சுவாமி ஓம்  கலந்து கொண்டார். போரட்டத்தில் அவர்களுக்கும் சில பெண்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது பெண்களால் அவர் சரமாரியாக தாக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களில் சுவாமி அடிவாங்கும் 2வது  நிகழ்ச்சி இதுவாகும்.



Next Story