பொருளாதார பிரச்சனைக்கு மோடியே காரணம் என மணமகள் கூறியதால் நின்று போன திருமணம்
பொருளாதார பிரச்சனைக்கு மோடியே காரணம் என மணமகள் கூறியுதால் இருவருக்கும் நடக்க இருந்த திருமணம் நின்று போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலபதிபர் ஒருவருக்கும் அரசு பணியில் உள்ள பெண்ணிற்கும் ,இரு வீட்டார் சம்மத்துடன் திருமணம் ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இந்த நிலையில் மணமகள்,மணமகன் இடையே நாட்டின் பொருளாதாரம் குறித்து உரையாடல் நடைபெற்றது. அதில் மணமகள் நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலைக்கு காரணம் பிரதமர் மோடி தான் என கடுமையாக விமர்சனம் செய்தார். இதனை ஒப்புக்கொள்ளாத மணமகன் பிரதமர் மோடி இதற்கு காரணம் இல்லை உலக பொருளாதார மந்தமே இதற்கு காரணம் என தன் வாதத்தை முன் வைத்தார். இதனை ஒப்புக்கொள்ளாத மணமகள் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தாக கூறப்படுகிறது. இறுதியில் மணமகனுக்கும் மணமகளுக்கும் பேச்சுவார்த்தை முற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த உறவினர்கள் அவர்களை சமாதானம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் கடைசி வரை சமாதானம் என்ற பேச்சுக்கே வர வில்லை. முடிவில் இருவரும் திருமணத்தை நிறுத்த சொல்ல, இரு வீட்டாரும் அதிர்ந்து விட்டனர். வேறு வழியில்லாமல் இரு குடும்பத்தாரும் திருமணத்தை நிறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியின் பொருளாதாரம் குறித்த மணமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது முடிவில் இருவருக்கும் நடக்க இருந்த திருமணத்தையே நிறுத்தியது உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story