வெடிகுண்டு எச்சரிக்கை! விமான நிலையத்தில் பையை கண்டுபிடிப்பதில் பாதுகாப்பு தோல்வி
டெல்லி விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர்கள் நடத்திய பாதுகாப்பு ஒத்திகையில் வெடிகுண்டு இருந்த பை கடைசி வரையில் கண்டு பிடிக்கப்படவில்லை.
புதுடெல்லி,
நாடு முழுவழும் விமான நிலையங்களுக்கு மத்திய அரசின் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கி வருகிறது. சிவில் விமானப் பாதுகாப்புக்கான பணியகம் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கடந்த மூன்று மாதங்களாக பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகின்றனர். ஒத்திகையின் ஒருபகுதியாக டெல்லி விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சோதிக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு ஒத்திகையின் போது வெடிகுண்டு இருந்த பையை கடைசி வரையில் கண்டு பிடிப்பதில் தோல்வியை தழுவியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சோதனையின் போது சிவில் விமானப் பாதுகாப்புக்கான பணியகம் தரப்பில் அதிகாரியின் கை பையில் கண்ணி வெடிகுண்டு (வெடிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு) வைக்கப்பட்டது. வெடிப்பொருட்கள அடங்கிய பையுடன் சென்ற அதிகாரி விமான நிலையம் சென்றுவிட்டார். வெடிகுண்டு இருப்பதை சிஐஎஸ்எப் வீரர்கள் கண்டுபிடிக்கவில்லை. ஜம்மு நோக்கிய ஏர் இந்தியாவிற்கு செல்லும் பயணிகளின் கை பையை சோதனை செய்யும் போது வெடிகுண்டை கண்டுபிடிப்பதில் பாதுகாப்பு படை தோல்வியை தழுவியது.
பின்னர் விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சிஐஎஸ்எப் வெடிகுண்டை கண்டுபிடிப்பதில் தோல்வி அடைந்ததாக சிவில் விமானப் பாதுகாப்புக்கான பணியகம் தெரிவித்து உள்ளது. சிஐஎஸ்எப் விமான பயணிகளின் கை பைகளை ஸ்கேனர்களை கொண்டு சோதனை செய்து வருகிறது. விமான போக்குவரத்துறை அதிகாரி பேசுகையில், விமான நிலையத்தில் நாங்கள் போலியாக ஒரு ஒத்திகையை நடத்தினோம். கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரி ஒருவர் பையில் வெடிப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டபோது, அதனை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடிக்கவில்லை என்றார்.
பையில் நாங்கள் சில வெடிப்பொருட்கள், ஒயர்கள் மற்றும் சில பாகங்களை நாங்கள் வைத்து இருந்தோம். இதற்கிடையே பணியின் போது கவனம் செலுத்தாத வீரர்கள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஸ்கேனிங் செய்யும் போது சந்தேகத்திற்கு இடமான பொருட்களை அடையாளம் காணும் வகையில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது என அதிகாரி குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story