காஷ்மீரில் ஏ.கே.47 துப்பாக்கியுடன் கிரிக்கெட் விளையாடும் பயங்கரவாதிகள்-வீடியோ
காஷ்மீர் பகுதியில் ஏ.கே.47 துப்பாக்கியுடன் பயங்கரவாதிகள் கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
இந்த வீடியோ 5 நிமிடம் ஓடும் வகையில் உள்ளது. மரங்கள் சூழ்ந்த பகுதியில் உள்ள வெட்ட வெளியில் கேமரா மேன் உள்பட 7 பயங்கரவாதிகள் ஏ.கே.47 துப்பாக்கியை வைத்து கொண்டு கிரிக்கெட் விளையாடுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமீபத்தில் பேட்டி அளித்த மத்திய இணை மந்திரி ஜித்தேந்திர சிங் காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த சில வாரங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு ராணுவம் தனது இறுதி கட்டத்திற்கு நுழைந்துள்ளது என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story