நடிகை கடத்தல் வழக்கில் கைதான திலீப் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
பிரபல தென்னிந்திய நடிகை கடத்தல் வழக்கில் கைதான நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
திருவனந்தபுரம்,
பிரபல தென்னிந்திய நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப்பின் 2 நாள் போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கமல்லி நீதி மன்றத்தில் நேற்று அவர் ஆஜர் படுத்தப்பட்டார். அவரிடம் மேலும் விசாரணை நடத்தி ஆதாரங் களைச் சேகரிக்க வேண்டி இருப்பதால், மேலும் ஒரு நாள் அனுமதி கேட்டு போலீஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று மாலை 5 மணி வரை திலீப்பை காவலில் எடுத்து விசாரிக்கநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன்காரணமாக விசாரணை முடிந்து இன்று மாலை 5 மணிக்கு திலீப் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அப்போது திலீப்பின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story