சசிகலாவுக்கு சலுகை: பணம் வாங்குவது தொடர்பாக சிறை அதிகாரிகளுக்கு இடையே சண்டை குமாரசாமி குற்றசாட்டு
ஓவ்வொரு மாதமும் ரூ.10 லட்சம் பணம் சசிகலாவிடம் சிறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூர்,
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சிறை சென்று இன்றுடன் சரியாக 5 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது. இன்னமும் அவர்கள் சுமார் 3 ஆண்டுகள் சிறை வாசத்தை அனுபவிக்க வேண்டியதுள்ளது.
இந்த நிலையில் சிறையில் சசிகலாவுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சசிகலாவுக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைப்பதற்கு தனியாக ஒரு சமையல் கூடத்தையே சிறைக்குள் கட்டப்பட்டு இருப்பதாக புகார் கூறப்பட்டது. இத்தகைய சலுகைகளைப் பெற சிறைத்துறை அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பினர் ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த தாக டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கு 4 பக்க கடிதம் அனுப்பினார். இதை யடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் நடக்கும் தில்லு முல்லுகள் பற்றி தினமும் அதிர்ச்சி யூட்டும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. சிறைத் துறையில் முறை கேடுகள் நடப்பது வெட்ட வெளிச்சமாகி இருப்பதால் கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் இது புயலை கிளப்பியுள்ளது.
இதற்கிடையே ரூ.2 கோடி லஞ்சம் விவகாரம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை குழு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று விசாரித்து ஒரு வாரத்தில் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். விரிவான அறிக்கை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி குமாரசாமி கூறும் போது :-

அதிக பணம் வாங்கியது தொடர்பாக இரண்டு சிறை அதிகாரிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. சசிகலாவின் சிறப்பு சிகிச்சைக்காக ரூ 2 கோடி வாங்கபட்டு உள்ளது. அது தவிர ஓவ்வொரு மாதமும் ரூ.10 லட்சம் பணம் வாங்கி உள்ளனர். என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story