பாஜக மூத்த தலைவர் அத்வானி வீட்டில் திடீர் தீ விபத்து


பாஜக மூத்த தலைவர் அத்வானி வீட்டில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 15 July 2017 10:26 PM IST (Updated: 15 July 2017 10:26 PM IST)
t-max-icont-min-icon

பாஜக மூத்த தலைவர் அத்வானி வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

புதுடெல்லி,

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் வீடு டெல்லி பிருத்விராஜ் சாலையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் அவரது வீட்டில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வந்தன. அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு துறை உதவி இல்லாமலேயே தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story