சசிகலா அறையில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அழிப்பு டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு குற்றச்சாட்டு
சசிகலா அறையில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அழிக்கப்பட்டு இருப்பதாக டி.ஐ.ஜி. ரூபா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து கடந்த 10-ந்தேதி சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா சிறைக்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர், சசிகலா அடைக்கப்பட்டிருந்த அறையை வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறை ஆய்வின்போது, சசிகலா சிறை அறையில் பதிவு செய்யப்பட்ட ‘வீடியோ’ அழிக்கப்பட்டு உள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“கடந்த 10-ந்தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் பெண் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் இடத்துக்கு சென்றேன். சசிகலா அடைக்கப்பட்டு இருக்கும் சிறை அறையை பார்வையிட்டேன். அப்போது, எனது செல்போன் சரியாக வேலை செய்யவில்லை.
இதனால், சிறையில் இருக்கும் கையடக்க வீடியோ கேமரா(கேண்டிகேம்) உதவியுடன் சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறை அறையை வீடியோ எடுத்து பதிவு செய்து கொண்டேன். பின்னர், அந்த கேமராவை சிறை அலுவலகத்தில் ஒப்படைத்து அங்குள்ள ஊழியரிடம் அதில் உள்ள வீடியோவை பதிவிறக்கம் செய்து ‘பென்டிரைவில்’ வைத்து கொள்ளும்படி கூறினேன். இதனைத் தொடர்ந்து, மீண்டும் அந்த கேமரா என்னிடம் வந்தபோது அதில் எந்த வீடியோ காட்சியும் இல்லை. அதில் இருந்த வீடியோ அழிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story