பேருந்து விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் பலி: ராகுல் காந்தி இரங்கல்
அமர்நாத் யாத்ரீகர்கள் பேருந்து விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்நாத் யாத்ரீகர்களை சுமந்து சென்ற பேருந்து ஒன்று திடீரென பள்ளத்திற்குள் கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் யாத்ரீகர்கள் 16 பேர் உயிரிழந்தனர். 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அமர்நாத் யாத்ரீகர்கள் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
அமர்நாத் யாத்திரை சென்ற யாத்ரீகர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தது மிகவும் கவலை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story