மேற்கு வங்காளத்தில் வரதட்சணை கொடுமையால் திருமணமான பெண் கொலை
மேற்கு வங்காளத்தில் வரதட்சணை கொடுமையால் திருமணமான பெண் கொல்லப்பட்டுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள அசோகநகர் குடியிருப்பில் அபிபூர் சஹாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று மாலை வரதட்சணை கொடுமையால் மாமியார் மற்றும் கணவரால் அந்த இளம்பெண் கொல்லபட்டுள்ளதாக பெண்ணின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உடலில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தொண்டையில் இருந்து துர்நாற்றம் வீசியதாக மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் அபிபூர் சஹாஜி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி அபிபூர் சஹாஜி தலைமறைவாகி உள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மற்றகுற்றவாளிகளிடம் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக உயர்போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story