பா.ஜனதா எம்.பி. ரூபா கங்குலி மீது வழக்குப்பதிவு
பெண்களை இழிவுபடுத்தியதாக பா.ஜனதா எம்.பி. ரூபா கங்குலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிம்தா,
பா.ஜனதா சார்பில் டெல்லி மேல்-சபை எம்.பி.யாக இருப்பவர் ரூபா கங்குலி. இவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் வீட்டு பெண்களை மேற்கு வங்கத்தில் தனியாக விட்டு பாருங்கள். 15 நாட்களுக்குள் அவர்கள் மானப்பங்கம் செய்யப்படாமல் திரும்பி சென்றால் என்னிடம் வந்து கேளுங்கள்’ என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரசுக்கு சவால் விடும் வகையில் பேசினார்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியது அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி, பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே பெண்களை இழிவுபடுத்திய ரூபா கங்குலி மீது நடவடிக்கை எடுக்கும்படி நிம்தா போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூபா கங்குலி பேச்சு குறித்து மேற்கு வங்க மந்திரி சோவன்டெப் சட்டோபாத்யாய் கூறுகையில், ‘மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்து பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ரூபா கங்குலியிடம் இருந்து இது போன்ற அபத்தமான பேச்சு எப்படி வந்தது? என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் மேற்கு வங்க பெண்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய பெண்களையும் இழிவுபடுத்தி உள்ளார்’ என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story