அரசை விமர்சிக்கும் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்து சாதிக்கட்டும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தமிழக அரசை விமர்சிக்கும் நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்து சாதிக்கட்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறிஉள்ளார்.
புதுடெல்லி,
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து, அண்மையில் நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். இந்த ஆட்சியில் எல்லா துறைகளுமே கெட்டுப்போய் இருக்கிறது என்றார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் கமல்ஹாசன், தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். கமல்ஹாசனின் இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், தமிழக அரசை விமர்சிக்கும் நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்து சாதிக்கட்டும். தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்து கருத்து சொல்லட்டும். கமல் கூறும் கருத்துக்களுக்கு அமைச்சர்கள் பதில் மட்டுமே கூறுகின்றனர். திமுக கமல்ஹாசனுக்கு ஆதரவளிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. திமுகவுக்கு கமல்ஹாசன் உதவி தேவைப்படுவதால், ஸ்டாலின் ஆதரவாக பேசுகிறார் என்று கூறிஉள்ளார்.
அமைச்சர் சிவி சண்முகம் பேசுகையில், நடிகர் அஜித் குமாருக்கு இருந்த தைரியம் கமலுக்கு இல்லாமல் போனது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக ஆட்சியில் இருந்த போது நடிகர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று அஜித் குமார் பேசியப்போது கமல்ஹாசன் எங்கு சென்றார் என்று கேள்வி எழுப்பினார் சி.வி. சண்முகம். ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டால் கவனத்தில் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story