நாகலாந்து முதல்வர் லெய்சிட்சுவுக்கு பின்னடைவு: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான மனு தள்ளுபடி
நாகாலாந்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நடத்த கவர்னர் உத்தரவிட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை அம்மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோகிமா,
நாகலாந்து மக்கள் முன்னணி கட்சியின் ஆட்சி நடந்து வரும் நாகலாந்தில், முதல்வர் லெசிட்சுவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஜெலியாங் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள ஜெலியாங், தனக்கு 41 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறினார், அத்துடன், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டனர்.
இதற்கு முடிவு கட்டும் வகையில், முதலமைச்சர் லெய்சீட்சு வரும் 15-ம் தேதிக்குள் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் ஆச்சார்யா உத்தரவிட்டார். ஆனால், இதற்கு மறுத்த அவர், இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதால் அதற்கு வாய்ப்பு இல்லை என்றார். அத்துடன் கவர்னரின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி கவுகாத்தி ஐகோர்ட்டின் கோகிமா அமர்வில் முதலமைச்சர் மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட்டதற்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இந்த விவகாரத்தை பொறுத்தவரை கவர்னரின் விருப்பத்துக்கே முடிவை விட்டுவிடுவதாக நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
Related Tags :
Next Story