ஜம்மு காஷ்மீரில் பள்ளிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் இந்திய ராணுவம் தக்க பதிலடி


ஜம்மு காஷ்மீரில் பள்ளிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் இந்திய ராணுவம் தக்க பதிலடி
x
தினத்தந்தி 18 July 2017 8:13 PM IST (Updated: 18 July 2017 8:13 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீர் நவ்ஷாராவில் அரசு பள்ளிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர்,

காஷ்மீரில் அடிக்கடி அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவத்தால், இந்திய வீரர்கள் மட்டுமின்றி எல்லையோர கிராம மக்களும் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அங்கு இரு நாடுகளுக்கு இடையே அமலில் உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய பகுதிகளில் தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர்.

சமீப காலமாக அடிக்கடி ஜம்மு காஷ்மீர் எல்லைபகுதியில் ஒட்டியுள்ள கிராம பகுதியையும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் நவ்ஷாராவில் அமைந்துள்ள 2  அரசு பள்ளிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று மதியம் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை மீறி பள்ளிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். ஆபத்தை உணர்ந்த பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக தரையில் படுத்துக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ராணுவத்தினரை துரத்தி அடித்தனர்.  பள்ளி மாணவ மாணவிகள், ஆசியர்கள், உள்ளிட்டோரை பத்திரமாக மீட்டனர்.  நேற்று பாலாகோட், மஞ்சகோட் மற்றும் பரோட்டி எல்லைப்புற பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் தொடுத்தது. இதில் பரோட்டி பகுதியை சேர்ந்த சஜதா ஹவுசர் என்ற 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மஞ்சகோட் பகுதியில் ஒரு ராணுவ வீரர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். 

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தி இருப்பது    பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story