சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல்


சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 19 July 2017 10:05 AM IST (Updated: 19 July 2017 10:05 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு சிறையில் சசிகலாவிற்கு சொகுசு வசதிகள் கிடைத்தது எப்படி என்பது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.


பெங்களூரு, 

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். அங்கு சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகளை பெற்றுள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். சிறையில் முறைகேடுகள் நடப்பதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம்சாட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக அந்த அறிக்கையில் அவர், சசிகலாவுக்கு தனி சமையலறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து கர்நாடக அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

 இது கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டதாகவும், அவருக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் சிறையில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு, சிறை மாற்றப்பட்டால் துமகூருவில் உள்ள மகளிர் சிறைக்கு சசிகலாவை மாற்ற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் கிடைத்தது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் கிடைக்க, வெளிநாடு வாழ் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் உதவி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அவர் துமகூருவை சேர்ந்தவர். அவர் ஆஸ்திரேலியாவில் தொழில் செய்து வருகிறார். அங்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பை நடத்தி வருகிறார். அவர் அ.தி.மு.க.(அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது. இவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளுடன் தொடர்பு வைத்து சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க உதவியுள்ளார். 

மேலும் அவர் மூலமாகத்தான் சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணம் லஞ்சமாக கைமாறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சிறையில் சிலருக்கு மாத சம்பளத்தைபோல் லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


Next Story