மொபைல் மூலம் பெண்ணுக்கு தொந்தரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது புகார்


மொபைல் மூலம் பெண்ணுக்கு தொந்தரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது புகார்
x
தினத்தந்தி 20 July 2017 11:12 AM IST (Updated: 20 July 2017 11:12 AM IST)
t-max-icont-min-icon

மொபைல் மூலம் பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்

திருவனந்தபுரம் கேரளாவில்  காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் பாலியல் துன்புறுத்தலால் 51 வயது பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கேரள மாநிலம் நெய்யாத்தின்கரா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தூக்கமாத்திரை அதிக அளவில் தின்று மயங்கிய நிலையில் 51 வயது பெண் ஒரு அனுமதிக்கபட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

அந்த பெண்ணின் கணவர்  கோவலம் கூறுகையில் , தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வின்செண்ட் மொபைல் மூலம் தொடர்ந்து தன்னுடைய மனைவியை தொல்லைபடுத்தினார். இதனால் தனது மனைவி தற்கொலைக்கு முயன்றதாக போலீசில் புகார் செய்தார்.

நேற்று போலீஸ் துறை வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு தீவிர கருத்தில் எடுத்துக் கொள்ளபட்டு உள்ளது. மாநில தலைமை போலீஸ் அதிகாரி  லோக்நாத் பெகரா இது குறித்து கொல்லம் நகர் போலீஸ் கமிஷனர் அஜீதா பேகம் இது குறித்து விசாரனை நடத்த உத்தரவிட்டு உள்ளார் என கூறி உள்ளது.

இந்த புகார் குறித்து எம்.எல்.ஏ வின்சன்ட் கூறும் போது இது ஆதாரமற்ற குற்றசாட்டு விசாரணையை சந்திக்க தயாராக உள்ளேன் என கூறினார்.

Next Story