ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுட்டதில் உள்ளூர் இளைஞர் பலியானார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பீராவ் பகுதியில், பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது ஒரு கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியது. இதனால், சற்று தடுமாறிய பாதுகாப்பு படை, அங்கிருந்து வன்முறை கும்பலை விரட்ட துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் கல்வீசிய கும்பலில் இருவர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களில் தன்வீர் அகமது வானி என்ற 18 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயம் அடைந்த மற்றொருவருக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலியானதையடுத்து, பீராவ் பகுதியில் பதட்டமான சூழல் காணப்படுகிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story