கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும் விவசாயிகள் அறிவிப்பு
கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை 100 நாள் 200 நாள் வரையும் எங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். நேற்று முன்தினம் விவசாயிகள் தங்களை தாங்களே துடைப்பத்தால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. நேற்று விவசாயிகள் பாதி மொட்டை அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 8-வது நாளாக இன்று விவசாயிகள் மொட்டையடித்தும், மனித மண்டை ஓடுகள், எலும்பு துண்டுகள், விஷ பாட்டில்கள் ஆகியவற்றுடன் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை 100 நாள் 200 நாள் வரை எங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story