மாட்டுப்பட்டி ஆற்றில் மனித கைவிரல்கள் போல் காட்சியளிக்கும் பாறை
மாட்டுப்பட்டி ஆற்றில் மனித கைவிரல்கள் போல் காட்சியளிக்கும் பாறையை அந்த வழியாக செல்பவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
மூணாறு,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மாட்டுப்பட்டி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு மாட்டுப்பட்டி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இப்போது மழை குறைந்துள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது.
இந்தநிலையில் மாட்டுப்பட்டி ஆற்றில் உள்ள ஒரு பாறை வெளியே தெரிய தொடங்கியுள்ளது. அந்த பாறை மனித கைவிரல்கள் போல் காட்சியளிக்கிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தேய்மானம் ஏற்பட்டு இந்த பாறை இப்படி மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த பாறையை அந்த வழியாக செல்பவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
Related Tags :
Next Story