ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணிமீது சிறுநீர் கழித்த ஆண் பயணி


ஏர் இந்தியா  விமானத்தில் பெண் பயணிமீது சிறுநீர் கழித்த ஆண் பயணி
x

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஆண் பயணி மீது நடவடிக்கை எடுக்க மத்திய மந்திரி உத்தரவிட்டுள்ளார்.


 புதுடெல்லியிலிருந்து நியூயார்க் செல்லும் விமானத்தில் பயணித்த பெண் மீது போதையில் இருந்த ஆண் பயணி சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மகளான இந்திராணி கோஸ் என்பவர் டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

அதில், அவமானமாக உள்ளது ஏர் இந்தியா, நேற்று குடிபோதையில் இருந்த பயணி தன்னுடைய பேண்டை அவிழ்த்து என் அம்மா உட்கார்ந்திருந்த இருக்கை மீது சிறுநீர் கழித்துள்ளார்.

தனியாக என் தாய் பயணித்தார், இது அதிர்ச்சியளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து கஸ்டமர் கேருக்கு போன் செய்த போது அவர்கள் சரியாக உதவவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கு பதில் டுவீட் அளித்துள்ள இந்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, இது குறித்து ஏர் இந்தியா உடனே நடவடிக்கை எடுத்து தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூறியுள்ளதோடு, இந்திராணியின் தாய்க்கு நேர்ந்த மோசமான அனுபவத்துக்கு வருந்துவதாகவும் கூறியுள்ளார்.


Next Story