விமானத்தில் பெண் இருக்கையில் சிறுநீர் கழித்த குடிபோதை ஆசாமி: விசாரணை நடத்த விமானபோக்குவரத்துறை மந்திரி உத்தரவு
நியூயார்க்கில் இருந்து புதுடெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் இருக்கையில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.
புதுடெல்லி,
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏ1 102 என்ற விமானம் நியூயார்க்கில் இருந்து புதுடெல்லிக்கு நேற்று முன் தினம் வந்தது. அப்போது வயதான பெண் ஒருவர் அமர்ந்து இருந்த இருக்கைக்கு அருகே, குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் சிறுநீர் கழித்து விட்டு சென்றார்.
டெல்லி வந்து சேர்ந்ததும் அந்த பயணி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் அனுப்பி விட்டனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பயணியின் மகள் இந்திராணி கோஷ் தனது டுவிட்டரில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கும், மத்திய சிவில் விமானப்போக்குவரத்துறை மந்திரி ஜெயந்த் சின்ஹாவுக்கும் புகார் அளித்தார்.
இதற்கு டுவிட்டரில் பதில் அளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை மந்திரி ஜெயந்த் சின்ஹா,
இந்திராணி கோஷ் அளித்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உடனடியாக எனக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஏர் இந்தியா நிறுவனத்திற்கும், விமானப்போக்குவரத்து துறைக்கும் உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவத்துக்காக இந்திரானி கோஷிடம் வருத்தமும், வேதனையும் தெரிவிக்கிறேன்.
எனக்கூறியுள்ளார்.
Related Tags :
Next Story