வருமான வரித் தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 71 சதவீதமாக உயர்வு - நிதி அமைச்சகம்


வருமான வரித் தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 71 சதவீதமாக உயர்வு - நிதி அமைச்சகம்
x
தினத்தந்தி 2 Sept 2018 8:09 AM IST (Updated: 2 Sept 2018 8:09 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரித் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 71 சதவீதம் அதிகரித்துள்ளது. #FinanceMinistry

புதுடெல்லி,  

நாட்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 71 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில், வரி செலுத்துவது குறித்த தெளிவான அறிவு, காலதாமத்திற்கு அபராதக் கட்டணம் உள்ளிட்டவை காரணமாக வருமான வரித் தாக்கல் உயர்ந்துள்ளதாகவும், இதில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வரை 5.42 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.17 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருமான வரி தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 70.86% அதிகரித்துள்ளதாகவும்,  கடைசி நாளான ஆகஸ்ட் 31ந் தேதி மட்டும், 34.95 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாத சம்பளம் பெறும் தனி நபர்கள் ஆகஸ்ட் 31ந் தேதி வரை 3.37 கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர். இதுவே கடந்த ஆண்டு 2.19 கோடியாக இருந்தது. இதன்மூலம் 54% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்னுரிமை வரி திட்டம் மூலம் பலன் பெற 1.17 கோடி பேர் இ-பில்லிங் செய்துள்ளனர். இதுவே கடந்த 2017 ஆகஸ்ட் மாதத்தில் 14.93 லட்சமாக இருந்தது.

மத்திய அரசின் தொடர் அழுத்தங்கள், பண மதிப்பிழப்பு உள்ளிட்ட காரணங்களால், வருமானவரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story