காணாமல் போன பள்ளி மாணவிகளை 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார்


காணாமல் போன பள்ளி மாணவிகளை 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
x
தினத்தந்தி 2 Sept 2018 4:46 PM IST (Updated: 2 Sept 2018 4:46 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் காணாமல் போன பள்ளி மாணவிகளை மும்பை போலீசார் 24 மணி நேரத்தில் மீட்டுள்ளனர்.


மும்பை,

மும்பையின் கொலாபாவில் உள்ள பள்ளியில் 8-வகுப்பு படித்து வரும் மாணவிகள் 5 பேர் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்று வீடு திரும்பவில்லை. இதனால் பதறி போன பெற்றோர் மாணவிகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

பெற்றோர் அளித்த புகாரின் பேரின் போலீசார் மாணவிகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதனையடுத்து குர்லா ரயில் நிலையத்தில் 4 மாணவிகள் நிற்பதை  போலீசார் ஒருவர் பார்த்துள்ளார். அவர்களை பத்திரமாக மீட்ட போலீசார் பாதுகாப்பாக காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

5 மாணவிகளில் ஒருவர் உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுவிட்டார் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  காணாமல் போன மாணவிகளை 24 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

பள்ளியில் நடைபெற்ற இடைதேர்வில் காணாமல் போன மாணவிகள் 3 பாடங்களில் தோல்வி அடைந்தாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story