ராபர்ட் வதேரா மீது வழக்கு: ரபேல் விமான ஒப்பந்த முறைகேட்டில் இருந்து திசைதிருப்ப முயற்சி, காங்கிரஸ் குற்றச்சாட்டு


ராபர்ட் வதேரா மீது வழக்கு: ரபேல் விமான ஒப்பந்த முறைகேட்டில் இருந்து திசைதிருப்ப முயற்சி, காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 Sept 2018 4:00 AM IST (Updated: 3 Sept 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

ரபேல் விமான ஒப்பந்த முறைகேட்டில் இருந்து திசைதிருப்பவே ராபர்ட் வதேரா மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி, 

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது நில முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜெவாலா கூறியதாவது:-

பொய்யான, போலியான வழக்குகளை எதிர்க்கட்சியினர் மீது போடும் புதிய நடைமுறையில் மோடி அரசு பொய்களை உருவாக்கி வருகிறது. ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு, பண மதிப்பிழப்பு மோசடி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் ரூ.12 லட்சம் கோடி சுருட்டல், ரூபாய் மதிப்பு தொடர் சரிவு, பொருளாதார சீரழிவு ஆகியவற்றில் இருந்து திசைதிருப்பவே இந்த வழக்கை போட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story