கேரளாவில் மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவி ஹனான் கார் விபத்தில் படுகாயம்
கேரளாவில் மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவி ஹனான் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
திருவனந்தபுரம்
சமீபத்தில் கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி ஹனான் என்பவர் தனது குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்றதை நெட்டிசன்கள் கேலி செய்தனர்.
ஹனானை நேரில் அழைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று கூறி அந்த மாணவிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது மாணவி ஹனான், 1.5 லட்சத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக வழங்கினார். இதனால் மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்தது.
இந்நிலையில் மாணவி ஹனான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு விட்டு திருச்சூருக்கு காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு நபர் அவரது காருக்கு முன்பே குறிக்கிட்டார்.
அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் வண்டியை திருப்பியதில், வண்டி வேகமாக மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவி ஹனான் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் ஹனானையும், கார் டிரைவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் ஹனானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story