”ரகுராம் ராஜனின் கொள்கைகளாலேயே நாட்டின் வளர்ச்சி சரிந்துள்ளது” நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் குற்றச்சாட்டு


”ரகுராம் ராஜனின் கொள்கைகளாலேயே நாட்டின் வளர்ச்சி சரிந்துள்ளது”  நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 Sept 2018 4:46 PM IST (Updated: 3 Sept 2018 4:46 PM IST)
t-max-icont-min-icon

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் கொள்கைகளாலேயே நாட்டின் வளர்ச்சி சரிந்துள்ளது என்று என நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இது தொடர்பாக பொருளாதார வல்லுநர்  ராஜீவ் குமார்  கூறியிருப்பதாவது:

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் கொள்கைகளாலேயே நாட்டின் வளர்ச்சி சரிந்துள்ளது. பணமதிப்பிழப்பால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாடுகள் முற்றிலும் பொய்யானவை. 

மன்மோகன் சிங், பா.சிதம்பரம் போன்றோர் இது குறித்து கூறுவது மிகுந்த அச்சமாக உள்ளது.  2015-16-ம் ஆண்டில் 9.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.  மேலும் வங்கித்துறையில் ரகுராம் ராஜன் புதிய வழிகளை உருவாக்கியது வளர்ச்சியின் சரிவுக்கு காரணம். 

 வங்கித்துறையில் வாராக்கடன் அதிகரித்ததாலேயே வளர்ச்சி சரிந்துள்ளது.  வாராக்கடன்களை வசூலிக்க கையாண்ட விதம் தான் இதற்கு  காரணம்.  வாராகடன் விவகாரத்தால் வங்கிகள் தொழில்துறைக்கு அளித்து வந்த ஆதரவையும், உதவிகளையும் நிறுத்தி விட்டது. இது தான் வளர்ச்சி பாதிக்க காரணமாக அமைந்தது. சில காலாண்டுகளில் பெரிய தொழில் நிறுவனங்களின்  வளர்ச்சி 1.5 சதவீதம் முதல் 2 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story