கோவாவில் முதல்-மந்திரி, மந்திரிகள் உடல் நலக்குறைவால் நிர்வாகம் முடக்கம் ஆளுநர் தலையிட காங்கிரஸ் கோரிக்கை
கோவாவில் முதல்-மந்திரி, மந்திரிகள் உடல் நலக்குறைவால் நிர்வாகம் முடங்கியுள்ளதால் ஆளுநர் தலையிட காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவா,
கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கான கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். மூன்று மாதங்களுக்கு பிறகு ஜுன் 14-ல் அவர் இந்தியா திரும்பினார். இதன் பின்னர், இம்மாதம் 10-ம் தேதி அவர் மீண்டும் அமெரிக்கா சென்று 17-ம் தேதி திரும்பினார். தற்போது மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
கோவா முதல்-மந்திரியை தொடர்ந்து, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி பிரான்சிஸ் டி'சோசாவும் உடல்நலம் குன்றி சிகிச்சைக்காக கடந்தமாதம் அமெரிக்கா சென்றுள்ளார். மின்துறை அமைச்சர் மட்காக்கரும் மூளை பாதிப்பு நோயால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராமாகாந்த் கலாப் தெரிவிக்கையில்,
கோவாவில் மனோகர் தலைமையில் அமைந்துள்ள அரசு கடந்த 6 மாதங்களாகவே அரசியலமைப்பு ரீதியான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. முதல்-மந்திரி உடல்நலக்குறைவை தொடர்ந்து 2 மந்திரிகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாம் அனைவரும் அவர்கள் விரைவில் குணமுடைய இறைவனை பிராத்தனை செய்வோம். ஆனால் கோவாவில் அரசு செயலற்று இருப்பதை பார்த்து கொண்டிருக்க முடியாது. இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story